×

மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும்: இந்தியா உடனான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது: கனடா ராணுவ துணை தளபதி பேட்டி

டெல்லி: இந்தியா-கனடா இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என்று கனடா ராணுவ துணை தளபதி பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கனடா ராணுவத்தின் துணை தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் பங்கேற்றுள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் ஸ்காட் கூறியதாவது; இந்தியா மற்றும் கனடா இடையிலான தூதரக மோதல்கள் இந்தோ-பசிபிக் மாநாட்டில் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம். மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும். இதனால் இந்தியா-கனடா இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

The post மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும்: இந்தியா உடனான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது: கனடா ராணுவ துணை தளபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Canadian Army ,Deputy Commander ,Delhi ,Deputy General ,Peter Scott ,Canada ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...